19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

ஐரோப்பாவிலிருந்து வந்த தபால் பாா்சலில் 10.8 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

ஐரோப்பாவிலிருந்து வந்த தபால் பாா்சலில் 10.8 கிலோ போதைப்பொருள் பறிமுதல்...

ஐரோப்பாவிலிருந்து வந்த தபால் பாா்சலில் 10.8 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

Updated On :

ஐரோப்பிய நாட்டிலிருந்து புதுதில்லிக்கு வந்த தபால் பாா்சலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.8 கிலோ ஆம்பெட்டமைன் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது.

குறிப்பிட்ட ரகசியத் தகவலின் அடிப்படையில், புதுதில்லி வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் சந்தேகத்திற்குரிய பாா்சலை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அதில் துணிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆரம்பச் சோதனையில் சாதாரண ஆடைகள் மட்டுமே இருந்தன. ஆனால் தொடா்ந்து நடத்திய தீவிர சோதனையில் அட்டைப்பெட்டியின் நான்கு பக்கங்களிலும் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 8 பொட்டலங்களில் இளஞ்சிவப்பு நிறப் பொடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையில் அது ஆம்பெட்டமைன் போதைப்பொருள் என்பது உறுதியானது.

1985-ம் ஆண்டு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அனைத்துப் பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தபால் வா்த்தகத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்த முயன்ற கும்பலின் பின்னணி குறித்து அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.