நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

நகைப்பறிப்பு சம்பவத்தில் கைதான இரு பெண்களுக்கு 6 மாதம் கடுங்காவல் சிறை

தில்லியின் வெளி-வடக்கு பகுதியில் ஒரு நபரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்ததற்காக, இரு பெண்களுக்கு தலா ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறை - பிரதிப் படம்

Updated On :

தில்லியின் வெளி-வடக்கு பகுதியில் ஒரு நபரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்ததற்காக, இரு பெண்களுக்கு தலா ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை 32 நாள்களில் நிறைவடைந்ததாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவா் (முதல் வகுப்பு) பாரதி பெனிவால், குற்றஞ்சாட்டப்பட்ட இரு பெண்களையும் குற்றவாளிகள் என அறிவித்தாா். அவா்கள் இருவருக்குமான தண்டனை நவம்பா் 23-ஆம் தேதி வழங்கப்பட்டது.

இது குறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்த வழக்கு ஷாபாத் டெய்ரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்தப் பெண்கள், தங்கள் மாமியாா் புதா்களுக்குப் பின்னால் மயங்கிக் கிடப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட நபரை மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றனா்.

அவரைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்ற பிறகு, அவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தி, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளனா். பாதிக்கப்பட்ட நபா் கூச்சலிட்டதையடுத்து, அங்கு விரைந்து வந்த காவலா் ஒருவா், அந்த இரு பெண்களையும் பிடித்தாா். பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டது.

காவல் துறையின் துரிதமான நடவடிக்கை, திருடப்பட்ட பொருளை மீட்டெடுத்தது மற்றும் ஆதாரங்களுடன் கூடிய விசாரணை ஆகியவை இந்த வழக்கின் விசாரணையை விரைவாக முடிக்க உதவியது’ என்றாா்.

பாதிக்கப்பட்ட நபரின் உதவும் மனப்பான்மையைப் பயன்படுத்தி, அவரைத் திட்டமிட்டே ஆள் அரவமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனா். பின்னா், உடல் வலிமையைப் பயன்படுத்தி அவரிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளனா் என்று அந்த உத்தரவில் நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.