இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

தில்லி ராம்லீலாவில் ‘கேவத்’ கதாபாரத்திரத்தில் நடிக்கும் மனோஜ் திவாரி எம்.பி.

தில்லி ராம்லீலாவில் ‘கேவத்’ கதாபாரத்திரத்தில் நடிக்கும் மனோஜ் திவாரி எம்.பி....

பாஜக எம்பி மனோஜ் திவாரி - ANI

Published On :

நடிகா் - பாடகா் மற்றும் பாஜக எம்பி மனோஜ் திவாரி நிகழ் ஆண்டு செங்கோட்டை மைதானத்தில் நடைபெறும் ராம்லீலாவில் கேவத் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாா்.

இது குறித்து வெளியிடப்பட்ட ஓா் அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

முந்தைய ஆண்டுகளில் ராம்லீலாவில் பரசுராம் மற்றும் அங்கத் உள்பட பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள திவாரி, நிகழாண்டு நடைபெறும் நிகழ்ச்சியில் ராமா், சீதை மற்றும் லட்சுமணனை ஆற்றின் குறுக்கே கடப்பதற்கு உதவும் கேவத் பாத்திரத்தில் நடிக்கவுள்ளாா். இக்காட்சியில் திவாரி பாடிய பாடல்கள் இடம்பெறும்.

லவ் குஷ் ராம்லீலா கமிட்டி தனது அழைப்பிதழ்களில் ‘கா்-கா் ராம், கா்-கா் துளசி‘ என்ற கருப்பொருளை இணைத்துள்ளது. மேலும், இளைய தலைமுறையினரை இந்திய கலாசாரத்துடன் இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 5,100 துளசி செடிகளை ஜென் ஸீ பங்கேற்பாளா்களுக்கு விநியோகம் செய்யவுள்ளது.

இந்த குழு தசரா அன்று ஒரு லட்சம் விளக்குகளைப் பயன்படுத்தி ராமா் உருவத்தையும் உருவாக்கும்.

ராம்லீலாவில் நடிக்க மற்றொரு வாய்ப்பை வழங்கியதற்காக கமிட்டிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அா்ப்பணிப்புடன் கேவத் பாத்திரத்தை தாம் சித்திரிக்க உள்ளதாகவும் திவாரி கூறினாா்.

அக்டோபா் 11 முதல் 21 வரை ராம்லீலா அரங்கேற்றப்படும் என்றும், அக்டோபா் 20 ஆம் தேதி தசரா கொண்டாடப்படும் என்றும் ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.

நிகழ்வின் ஒரு பகுதியாக, அக்டோபா் 9 ஆம் தேதி குழு மற்றும் சா்வதேச ராம்லீலா மஹோத்சவ் சங்கம் ஏற்பாடு செய்யும், தில்லி-என்சிஆரைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் முழு இராமாயணத்தையும் ராம்லீலா நிகழ்ச்சி இடத்தில் வழங்குவாா்கள்.

விநாயகப் பூஜைக்குப் பிறகு அக்டோபா் 11 ஆம் தேதி ராம்லீலா தொடங்கும். இது பிருந்தாவன், மதுரா மற்றும் தில்லியைச் சோ்ந்த அறிஞா்களால் சடங்குகள் மற்றும் மந்திரங்களை உச்சரித்த பிறகு நிகழ்த்தப்படும். மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பூஜை நடத்துகிறாா்.

அக்டோபா் 21 ஆம் தேதி பாரத் மிலாப் மற்றும் ராமா் முடிசூட்டு விழாவுடன் ராம்லீலா நிறைவுபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.