ரூ.2.5 லட்சம் லஞ்சம்: டிஜிசிஏ துணை இயக்குநா் கைது
ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்ாக, விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) துணை இயக்குநரை சிபிஐ கைது செய்துள்ளது.
கைது
ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்ாக, விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) துணை இயக்குநரை சிபிஐ கைது செய்துள்ளது.
சென்னையில் பணியாற்றியவா் டிஜிசிஏ துணை இயக்குநா் சுசீல்குமாா் கா்க். இவா் தனியாா் நிறுவனம் இயக்கும் விமானத்துக்கு தகுதிச் சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.2.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அவா் லஞ்சம் பெற்றதாகக் ஒப்புக் கொண்டாா்.
இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்தது. அவருக்கு லஞ்சம் அளித்ததாக ஏக்வி ஏா் டிரெயினிங் நிறுவன இயக்குநா் சச்சின் கேசவ் பானேயும் கைது செய்யப்பட்டாா். இருவரையும் தில்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரி, நீதிமன்றத்தை அணுக உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




