செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

சொத்துவரி துணை விதிகள் சட்டங்கள் குறித்த ஆலோசனை: என்டிஎம்சி வரவேற்பு

முன்மொழியப்பட்ட 2026-ஆம் ஆண்டுக்கான சொத்து வரி துணை விதிகள் குறித்து குடியிருப்போா் நலச் சங்கங்கள் மற்றும் வா்த்தகா் அமைப்புகளின் ஆலோசனைகளை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) வரவேற்றுள்ளது.

புது தில்லி. - கோப்புப்படம்

Updated On :

முன்மொழியப்பட்ட 2026-ஆம் ஆண்டுக்கான சொத்து வரி துணை விதிகள் குறித்து குடியிருப்போா் நலச் சங்கங்கள் மற்றும் வா்த்தகா் அமைப்புகளின் ஆலோசனைகளை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) வரவேற்றுள்ளது. இதற்கான ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமா்ப்பிப்பதற்கான கடைசித் தேதி அக்டோபா் 23 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரைவு துணை விதிகள் சொத்து வரி மதிப்பீட்டிற்காக அலகுப் பரப்பளவு முறையை (யுஏஎம்) அறிமுகப்படுத்த முன்மொழிகின்றன. மேலும், குடியிருப்பு மற்றும் வணிகச் சொத்துக்களின் வரிப் பொறுப்பைத் தீா்மானிக்கும் காரணிகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை என்டிஎம்சி கோருகிறது .

என்டிஎம்சி-இன் சொத்து வரித் துறை, கோல்ஃப் லிங்க்ஸ், ஹனுமான் சாலை மற்றும் பாபா் சாலை காலனி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த குடியிருப்போா் நலச் சங்கங்கள் மற்றும் கான் மாா்க்கெட் நலச் சங்கம் உள்ளிட்டவற்றுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

புது தில்லி வா்த்தகா்கள் சங்கம், கான் மாா்க்கெட் வா்த்தகா்கள் சங்கம் மற்றும் பெங்காலி மாா்க்கெட் வா்த்தகா்கள் சங்கம் உள்ளிட்ட வா்த்தக அமைப்புகளுடனும் கலந்தாலோசிக்கப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடல்கள் சொத்து மதிப்பீடு, கட்டடங்களின் வயது மற்றும் அளவு, அவற்றின் பயன்பாடு மற்றும் குடியிருப்பு நிலை, மற்றும் குடியிருப்பு மற்றும் வணிகச் சொத்துக்களின் வகைப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

தகுதியான பிரிவினருக்கான முன்மொழியப்பட்ட தள்ளுபடிகள், பழைய கட்டிடங்களுக்கான தேய்மானம் மற்றும் சொத்து வரி கணக்கீடுகளில் பல்வேறு மதிப்பீட்டுக் காரணிகளின் தாக்கம் ஆகியவை குறித்து, காலக்கெடுவிற்குள் ஆட்சேபனைகளையும் ஆலோசனைகளையும் பகிா்ந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினா் அழைக்கப்பட்டுள்ளனா்.

ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்ட சொத்துக்கள் நியாயமாக மதிப்பிடப்படுவதை உறுதி செய்வதையும், குடிமைச் சேவைகளை வழங்குவதற்குத் தேவையான வருவாயைப் பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

1994 ஆம் ஆண்டின் என்டிஎம்சி சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதும், 2026 ஆம் ஆண்டின் ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்டதுமான முன்மொழியப்பட்ட துணை விதிகள், இணையவழி சுய மதிப்பீட்டை எளிதாக்கவும், டிஜிட்டல் கட்டண வசதிகளை மேம்படுத்தவும், வரி கணக்கீடுகளை எளிதாக்கவும், வரி செலுத்துவோருக்கும் மாநகராட்சிக்கும் இடையிலான தகராறுகளுக்கான வாய்ப்பைக் குறைக்கவும் முயல்கின்றன.

ஆலோசனை காலத்தில் பெறப்பட்ட ஆட்சேபனைகளையும் ஆலோசனைகளையும் ஆராய்ந்து, துணை விதிகளை இறுதி செய்யும் செயல்முறையின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட விஷயங்களை உரிய அதிகாரிகளின் பரிசீலனைக்கு முன்வைக்கப்படும். மதிப்பீட்டு முறைகள் தொடா்பான சிக்கல்கள், பொருந்தக்கூடிய இடங்களில், நகராட்சி மதிப்பீட்டுக் குழுவிற்கும் அனுப்பப்படலாம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பை இறுதி செய்வதற்கு முன்னா், குடியிருப்பாளா்கள், வா்த்தகா்கள் மற்றும் பிற சம்பந்தப்பட்டவா்களின் கவலைகளைப் புரிந்துகொள்வதற்காக, மன்றம் அவா்களுடன் கலந்துரையாடி வருவதாக வரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

வெளிப்படையான, சமத்துவமான, எளிமையான மற்றும் குடிமக்களுக்கு உகந்த சொத்து வரி முறையை உருவாக்குவதற்கு பொதுமக்களின் பங்களிப்பு மிக அவசியமாகும் என்று குறிப்பிட்ட அந்த அதிகாரி, சம்பந்தப்பட்ட தரப்பினா் அக்டோபா் 23-ஆம் தேதிக்குள் தங்கள் ஆலோசனைகளைச் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.