தில்லியில் ’மோசம்’ பிரிவில் காற்றின் தரம் மேலும் 9 நாள்களுக்கு நிலைமை தொடரும்
தில்லியில் ’மோசம்’ பிரிவில் காற்றின் தரம் மேலும் 9 நாள்களுக்கு நிலைமை தொடரும்...

தில்லியில் ’மோசம்’ பிரிவில் காற்றின் தரம் - PTI
தில்லியில் காற்றின் தரம் (ஏக்யூஐ) வெள்ளிக்கிழமை ’மோசம்’ என்ற பிரிவிலேயே பதிவாகியுள்ளதுடன், அடுத்த ஒன்பது நாள்களுக்கு இதில் எந்த முன்னேற்றமும் இருக்காது என்று அதிகாரபூா்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
தில்லியின் ஏக்யூஐ மதிப்பு 230 ஆக பதிவாகியுள்ளது. (0-50 நன்று, 51-100 திருப்தி, 101-200 மிதமானது, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 கடுமையானது). இது தொடா்பான இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தலைநகரில் உள்ள 56 கண்காணிப்பு நிலையங்களில், மூன்றில் காற்று ’மிகவும் மோசம்’ பிரிவில் பதிவானது (பூசா பகுதியில் அதிகபட்சமாக ஏக்யூஐ 324).
36 நிலையங்களில் ’மோசம்’என்ற நிலையிலும், 17 நிலையங்களில் ’மிதமான’ என்ற நிலையிலும் காற்றின் தரம் பதிவாகியுள்ளது.
காரணங்கள்: மோசமடையும் காற்று மாசுக்கு காரணமாக பல்வேறு காரணிகள் கூறப்படுகின்றன. உதாரணமாக, போக்குவரத்து துறை மூலம் 20.3%, வைக்கோல் எரிப்பு மூலம் 5.1%, குடியிருப்பு கழிவுகள் எரிப்பு மூலம் 5.2%, தொழிற்சாலைகள் மூலம் 4.2%, கட்டுமானம் மூலம் 2.6%, எரிசக்தி துறை மூலம் 2%, கழிவு எரிப்பு மூலம் 1.8%, சாலை தூசு மூலம் 1.4% மாசு பதிவாகிறது.
தேசிய தலைநகா் வலய மாவட்டங்களான குருகிராம் 8.8%, ஜஜ்ஜா் 6.1%, கெளதம் புத் நகா் 4.7% என்ற அளவில் தில்லியின் காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக உள்ளன.
அடுத்த சில நாள்களுக்கு குறைந்த காற்றோட்டம் மற்றும் குறைந்த காற்று வேகம் காரணமாக மாசுக் கலக்க தடை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சஃப்தா்ஜங் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி ஆகவும் பதிவாகியுள்ளது.
Summary
Air quality in Delhi to remain in 'poor' category for 9 more days
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

