வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

எலுமிச்சையாறு, கோரையாற்றின் குறுக்கே முடங்கிக் கிடக்கும் அணைத் திட்டம்

அம்பாசமுத்திரம், டிச. 7: ÷தாமிரபரணி பாசனத்தில் மழைக் காலங்களில் வீணாகும் உபரி நீரை சேமித்து விவசாயத்துக்குப் பயன்படுத்தும் வகையில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் எலுமிச்சையாறு, கோரையாறு அணைகள் கட்டும் திட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:13 am

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரம், டிச. 7: ÷தாமிரபரணி பாசனத்தில் மழைக் காலங்களில் வீணாகும் உபரி நீரை சேமித்து விவசாயத்துக்குப் பயன்படுத்தும் வகையில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் எலுமிச்சையாறு, கோரையாறு அணைகள் கட்டும் திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

÷தாமிரபரணி பாசனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை நீர் ஆதாரத்தைக் கொண்டு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி, வண்டல்ஓடை உள்ளிட்ட அணைகள் கட்டப்பட்டுள்ளன.

÷தாமிரபரணி வடிநில பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2.55 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆண்டுதோறும் சராசரியாக 1082 மி.மீ மழை பெறப்படுகிறது. இருந்த போதிலும் பருவ மழை பொய்த்து வருவதால் தாமிரபரணி பாசனம் பற்றாக்குறைப் பாசனமாக இருக்கிறது.

÷இதற்கிடையே தாமிரபரணி ஆற்றில் மழைக்காலங்களில் வீணாகும் உபரி நீரில் 3,000 மில்லியன் கனஅடி நீரை வறட்சிப் பகுதிக்கு வழங்கும் வகையில் வெள்ளநீர் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

÷இதற்காக ரூ. 369 கோடி மதிப்பில் கல்லிடைக்குறிச்சி அருகே கன்னடியன் கால்வாயில் இருந்து எம்.எல். தேரி வழியாக சாத்தான்குளத்துக்கு 75 கி.மீ தொலைவுக்கு வெள்ளநீர்க் கால்வாய் அமைக்கப்படுகிறது.

÷இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர் ஆதாரப் பகுதியில் கிடைக்கும் உபரி நீரைச் சேமித்து, பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் தடுப்பணைகள் கட்டுவது குறித்து அரசு பல்வேறு ஆய்வுகளை ஏற்கெனவே மேற்கொண்டது.

÷இதில் கல்லிடைக்குறிச்சி அருகே மலையடிவாரத்தில் எலுமிச்சையாற்றின் குறுக்கே ஓர் அணையும், பாபநாசம் அருகே அனவன்குடியிருப்பில் மலையடிவாரத்தில் கோரையாற்றின் குறுக்கே மற்றோர் அணை கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

÷தாமிரபரணி ஆற்றில் சராசரியாக ஆண்டுதோறும் 13,800 மில்லியன் கனஅடி நீர் வீணாகக் கடலில் கலப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே வீணாகும் உபரி நீரை சேமிக்க மலையடிவாரத்தில் நீர்வரத்து உள்ள தாழ்வான பகுதியில் அணைகள் கட்டுவது குறித்து மேற்கொண்ட ஆய்வில் கல்லிடைக்குறிச்சி அருகே எலுமிச்சையாறு, பாபநாசம் அருகே கோரையாற்றின் குறுக்கே அணைகள் கட்டலாம் என முடிவு செய்யப்பட்டது.

எலுமிச்சையாறு: ÷கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் மணிமுத்தாறு பிரதான கால்வாயின் தென்புறம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் எலுமிச்சையாறு உற்பத்தியாகிறது.

÷இந்த ஆற்று நீர் கோரையாற்றில் கலந்து பின்னர் தாமிரபரணியில்  கலக்கிறது. பருவ மழைக் காலங்களில் எலுமிச்சையாற்றில் ஏற்படும் வெள்ளநீர் தாமிரபரணியில் கலந்து வீணாகிறது.  

÷எனவே எலுமிச்சையாற்றின் குறுக்கே அணைகட்டுவது குறித்து ஆய்வு செய்து சுமார் ரூ. 25 கோடியில் அணை கட்ட உத்தேச மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இருப்பினும் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

÷இதுகுறித்து மணிமுத்தாறு பிரதான கால்வாய் முதல், 2- வது மதகு நீர்ப்பாசன சங்கத் தலைவர் பா. வேல்துரை எம்.எல்.ஏ. (காங்) கூறியதாவது:

÷எலுமிச்சையாற்றின் குறுக்கே அணைகட்டுவதன் மூலம் பொட்டல், சீரான்குளம் பகுதி விவசாயிகள் பயன்பெறுவார்கள். மேலும் மணிமுத்தாறு பிரதான கால்வாயில் முதல், 2- வது மதகு மூலம் பாசனம் பெறும் குளங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும்.

÷பிரதான கால்வாய் விவசாயிகள் மணிமுத்தாறு அணையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதில்லை என்றார் அவர்.

கோரையாறு:÷மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகப்படியாக நீர்ஆதாரம் கொண்டுள்ள பாபநாசம் மலையில், விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் வடக்கு மற்றும் தெற்கு கோரையாறு ஆகிய இடங்களில் இருந்து உற்பத்தியாகும் தண்ணீர் கோரையாறு வழியாக பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.

÷மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீர் அங்குள்ள சிங்கபெருமாள்குளத்தில் சேமித்து வைத்து பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

÷இருப்பினும் கோரையாற்றின் உபரி நீர் வீணாக தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. மழைக் காலங்களில் கோரையாற்றில் சுமார் விநாடிக்கு 2,000 கனஅடி நீர் உபரியாகச் செல்கிறது என்று கூறப்படுகிறது.

÷எனவே கோரையாற்றின் குறுக்கே  ரூ. 22 கோடி மதிப்பீட்டில் அணை கட்ட பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும்  அணைகட்டுவதற்கு தேவையான நிலம் வனப்பகுதியில் இருப்பதால் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

÷இதுகுறித்து அனவன்குடியிருப்பு உழவர் மன்ற அமைப்பாளர் செல்லத்துரை கூறியதாவது:

÷கோரையாற்றின் குறுக்கே அணை கட்டவேண்டும் என விவசாயிகள் 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அணை கட்டுவதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் பயன்பெறுவர்.

÷அணையில் இருந்து கடனாநதி அணைக்கு சுரங்கம் அமைத்து உபரி நீரைக் கொண்டு செல்வதன் மூலம் வறட்சிப் பகுதிக்கு தண்ணீர் வழங்கலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.