அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சங்கரன்கோவிலில் புதிய பஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த துப்புரவு தொழிலாளர்கள் தவிப்பு

சங்கரன்கோவில், ஜன 20: சங்கரன்கோவிலில் துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பு கட்டப்படுவதற்கு முன்பாகவே வெளியேற்றப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் புதிய பஸ் நிலையத்தில் குடியிருந்து வருகின்றனர். அங்கு அடிப்ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:53 am

மு. ஈஸ்​வ​ர​மூர்த்தி

சங்கரன்கோவில், ஜன 20: சங்கரன்கோவிலில் துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பு கட்டப்படுவதற்கு முன்பாகவே வெளியேற்றப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் புதிய பஸ் நிலையத்தில் குடியிருந்து வருகின்றனர். அங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 கழுகுமலை சாலையில் துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பு உள்ளது. 48 வீடுகள் கொண்ட இந்த குடியிருப்பு மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. அடிக்கடி சுவர்கள் பெயர்ந்து விழுந்ததில் துப்புரவுத் தொழிலாளி குழந்தைகள் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர். இந்நிலையில், புதிய குடியிருப்பு கட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 இதைத் தொடர்ந்து பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, அதே இடத்தில் மீண்டும் குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, 2009-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் வீடுகளை காலிசெய்து வெளியேற நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால், 48 குடும்பங்கள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

 அவர்கள் அந்தப் பகுதியில் வாடகைக்கு வீடு தேடி அலைந்தனர். துப்புரவுத் தொழிலாளி என்பதால் அவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை. சிலர் தங்களது உறவினர்களின் வீடுகளில் குடியேறினர். வீடு கிடைக்காத சுமார் 20 குடும்பத்தினர் திருவேங்கடம் சாலையில் இயங்காமல் இருக்கும் புதிய பஸ் நிலையத்தில் குடியேறினர்.

 தாற்காலிமாக குடியேற நகராட்சி நிர்வாகம் அனுமதியளித்தாலும், அங்கு தண்ணீர், கழிப்பிடம், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை.

மின் விளக்கு வசதியில்லாமல் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் அரிக்கேன் விளக்குகளை வைத்து படித்து வருகின்றனர்.

 நகரின் ஒட்டுமொத்த குப்பைகளை கொட்டும் குப்பைக் கிடங்கு தென்புறம் உள்ளதால், இரவு நேரங்களில் விஷப் பூச்சிகள் இந்த தாற்காலிக குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன.

அவற்றிடமிருந்து குழந்தைகளையும், தங்களையும் பாதுகாத்துக் கொள்ள தொழிலாளர்கள் வெகுநேரம் விழித்திருக்கிறார்கள்.

 அந்த பகுதி மக்கள் நடமாட்டம் இல்லாமல் மயானம் போல காட்சியளிப்பதால், போதையில் வருபவர்களின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 இதற்கிடையே 60 வீடுகள் கொண்ட புதிய துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பு சுமார் இரண்டரைக் கோடி செலவில் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளதாகவும், திட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்கு முன்பாகவே துப்புரவுத் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 எனவே, அந்த பகுதியில் மின்விளக்கு, தண்ணீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே துப்புரவுத் தொழிலாளர்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.