தூத்துக்குடி, ஜன. 8: தூத்துக்குடியில், ஓய்வு பெற்ற சுங்கத்துறை அலுவலர் வீட்டு கதவை உடைத்து ரூ.4 லட்சம் தங்க நகைகளைத் திருடிச் சென்ற நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ச. மகிமைதாஸ் (61). இவர், சுங்கத்துறையில் ரேடியோ ஆப்பரேட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் அமெரிக்காவிலும், மகள் மகராஷ்டிரா மாநிலம் புனேயிலும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகிமைதாஸ் கடந்த 28-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு புனேயில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந் நிலையில் வெள்ளிக்கிழமை அவரது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை அக்கம் பக்கத்தினர் கண்டுள்ளனர். உடனே அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மகிமைதாஸ், புனேயில் இருந்து அவசரமாக சனிக்கிழமை காலை ஊர்த் திரும்பினார். மேலும், தூத்துக்குடி தென்பாகம் போலீஸôரும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது இடைபட்ட நாளில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று, வீட்டில் இருந்த பிரோவையும் உடைத்து அதில் இருந்த 24 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம். இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீஸôர் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.