சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருச்செந்தூரில் கட்டி முடித்து 6 மாதங்களாகியும் திறக்கப்படாத வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

திருச்செந்தூர், செப். 18:  திருச்செந்தூரில் கட்டி முடித்து 6 மாதங்களாகியும் வருவாய் ஆய்வாளர் அலுவலகக் கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது,       திருச்செந்தூர் கோயில் நகரமாக மட்டுமில்லாது தாலுகாவின் தலைநகரம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:29 am

கே சுப்பிரமணியன்

திருச்செந்தூர், செப். 18:  திருச்செந்தூரில் கட்டி முடித்து 6 மாதங்களாகியும் வருவாய் ஆய்வாளர் அலுவலகக் கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது,

      திருச்செந்தூர் கோயில் நகரமாக மட்டுமில்லாது தாலுகாவின் தலைநகரமாகவும் விளங்குகிறது. இங்கு பேருந்து நிலைய உள்பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட நீதித்துறை மற்றும் உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம் ஆகியன ஒருங்கே உள்ளன.

கிராமச்சாவடி என்றழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகமும் சேர்ந்து பல ஆண்டுகளாக இரும்பு ஆர்ச் அருகில் உள்ள அரசு இடத்தில் இருந்து வந்தது.  

ஓடுகள் வேயப்பட்ட இந்த அலுவலகம் இடியும் அபாய நிலை ஏற்பட்டதால்  8 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் இடத்தில் மாடியில் இயங்கி வருகின்றது.

     இதனால் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் ஏறி, இறங்க மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்த தனியார் கட்டடத்துக்கு மாதம் ரூ.2400 வீதம் வாடகையாக மட்டும் இதுவரை சுமார் 2.5 லட்சம் வரை அரசு பணம் வீணாகி உள்ளது.

 இதற்குத் தீர்வு காணும் விதமாக 2010-ம் ஆண்டு ஜுன் மாதம் திருச்செந்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகில் புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகப்பணி கட்டத் தொடங்கி சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தன.

      பொதுப்பணித்துறை மூலம் ரூ. 8.5 லட்சம் செலவில் குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு இப்போது 6 மாதங்கள் ஆகி விட்டன. அமைச்சர் சண்முகநாதன் இக்கட்டடத்தைத் திறந்து வைப்பார் என இரு முறை தேதி அறிவிக்கப்பட்டும் அந்த நிகழ்ச்சி ரத்தாகியது.

      எனவே, இந்தக் கட்டடத்தைத் திறந்து வைத்தால் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மக்கள் பயன்பாட்டுக்காக ஒரே இடத்தில் இயங்கும் என்பதே மக்களின் விருப்பமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.