/

"மக்களை தேடி' மாநகராட்சி சிறப்பு முகாம்

  திருநெல்வேலி பெருமாள்புரத்தில் "மக்களை தேடி' மாநகராட்சி என்ற சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :12 மே 2013, 5:52 am IST

  திருநெல்வேலி பெருமாள்புரத்தில் "மக்களை தேடி' மாநகராட்சி என்ற சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

 முகாமுக்கு, மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மாநகராட்சியின் 19, 26, 27-வது வார்டு பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர். முகாமில், மாநகராட்சி ஆணையர் மோகன், உதவி ஆணையர் அனிதா, உதவி பொறியாளர் சாந்தி, மேலப்பாளையம் மண்டல தலைவர் ஹைதர்அலி, மாமன்ற உறுப்பினர்கள் டேனியல் ஆபிரகாம், ஜோசப், பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநகராட்சிக்கு புதிய ஆணையர்:  திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த சீனி அஜ்மல்கான் சென்னைக்கு மாற்றப்பட்டதை அடுத்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்துவந்த மோகன் மாநகராட்சி புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.