சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

முன்னறிவிப்பு இன்றி போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள் தவிப்பு

பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதால் போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Updated On :12 மே 2013, 5:54 am IST

பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதால் போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

 மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. இதனால் காலை முதல் மாலை வரை பாளையங்கோட்டையில் போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது.  புதிய பஸ் நிலையத்திலிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பெருமாள்புரம் போலீஸ் நிலையம், கார்த்திக் நர்சிங்ஹோம்,  அன்புநகர், உழவர் சந்தை ரயில்வே கேட், ஏ.ஆர். லைன், அண்ணா விளையாட்டரங்கம், சேவியர் கல்லூரி சந்திப்பு, எஸ்.பி. அலுவலகம் வழியாக இயக்கப்பட்டன.

 இதுபோல் தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பேருந்துகளும் மறுமார்க்கத்தில் இதே மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டன. பராமரிப்புப் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் குறித்து சரிவர முன்னறிவிப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் தவிக்க நேரிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.