தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர் சங்க மாநில அளவிலான கூட்டம் திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்க மாநில துணைத் தலைவர் எஸ். மோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ். குமாரசுவாமி முன்னிலை வகித்தார்.
தமிழக அரசின் நிலையும், அரசு ஊழியர்களும் என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகி எஸ். ஆறுமுகம், சங்கமும் அதன் நோக்கமும் குறித்து சாலை ஆய்வாளர் சங்க மாநில பொதுச்செயலர் எம். மாரிமுத்து, சாலை ஆய்வாளர்களின் பணித்தன்மை குறித்து சங்க மாநிலச் செயலர் எஸ். மதனமுசாபர் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இரா. ராஜேஸ்வரன், பார்த்தசாரதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அரசாணை 51-ன்படி கருவூலம் மூலம் சாலை ஆய்வாளர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும். அரசாணை 237-ன்படி பயணப்படி வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அரசு வெளியிட வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு சாலை தொழில் சம்பந்தமான பயிற்சி வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு மாதந்தோறும் நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவர் கே. பால்வண்ணன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் பி. பழனிராஜ் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுவனை தாக்கி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட 5 சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

பழனியில் காரில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் விபத்து தவிா்ப்பு

30 முதல் 90 வயதுடையோருக்கு தடகளப் போட்டி

அகில இந்திய ஹாக்கி: மும்பை இந்திய கப்பற்படை அணி சாம்பியன்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


