திருநெல்வேலி நகரம் பாரதியார் தெருவிலுள்ள அரசு கிளை நூலகத்தில் மகாகவி பாரதியார் வாசகர் வட்டம் சார்பில் மே தின விழா, புத்தக கண்காட்சி விழா, புற்றுநோய் விழிப்புணர்வு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, கே. சந்திரபாபு தலைமை வகித்தார். பிரஷ்நேவ் முன்னிலை வகித்தார். பொருநை பாலு வரவேற்றார்.
நூலக துப்புரவுப் பணியாளர் பொன்னம்மாளின் சேவையை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கப்பட்டது. உலக புத்தக தின விழா சிறப்புகள் குறித்து ஆவுடையப்பன், தளவாய் மாடசாமி, பிரஷ்நேவ் ஆகியோர் பேசினர்.
மதர்தெரசா கேன்சர் ஹெல்த் சென்டரைச் சேர்ந்த ஹென்றி ராஜன் புற்றுநோய் குறித்து உரையாற்றினார். பங்கேற்றவர்களின் மருத்துவ கேள்விகளுக்கும் அவர் விடையளித்தார். வாசகர் வட்டச் செயலர் சிவசங்கரன் தொகுத்து வழங்கினார். ஜெயபாலன், வெங்கட், சுவாமிநாதன், சித்ரா, மீனா அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பக்ரீத் பண்டிகை: மாடு, ஒட்டக இறைச்சி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை: கார்கே
தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? -கனிமொழி கேள்வி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


