பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதால் போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குலவணிகர்புரம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. இதனால் காலை முதல் மாலை வரை பாளையங்கோட்டையில் போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. புதிய பஸ் நிலையத்திலிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பெருமாள்புரம் போலீஸ் நிலையம், கார்த்திக் நர்சிங்ஹோம், அன்புநகர், உழவர் சந்தை ரயில்வே கேட், ஏ.ஆர். லைன், அண்ணா விளையாட்டரங்கம், சேவியர் கல்லூரி சந்திப்பு, எஸ்.பி. அலுவலகம் வழியாக இயக்கப்பட்டன.
இதுபோல் தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பேருந்துகளும் மறுமார்க்கத்தில் இதே மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டன. பராமரிப்புப் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் குறித்து சரிவர முன்னறிவிப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் தவிக்க நேரிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


