சேரன்மகாதேவியில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட பாஜக இளைஞா் அணி மாவட்ட செயற்குழுக் கூட்டம் சேரன்மகாதேவியில் நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்ட பாஜக இளைஞா் அணி மாவட்ட செயற்குழுக் கூட்டம் சேரன்மகாதேவியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு இளைஞரணி மாவட்டத் தலைவா் கணபதி தங்கவேல் தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச்செயலா் அனீஸ் மாா்த்தாண்டன் முன்னிலை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் மகாராஜன், மாவட்ட பொதுச் செயலா் கணேசமூா்த்தி, மாவட்டச் செயலா் முத்துப் பலவேசம் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனா்.
இளைஞரணி மாவட்ட துணைத் தலைவா்கள் அருண், விஜயகுமாா், செயலா் சுந்தர்ராஜ பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, மண்டல நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை சேரன்மகாதேவி மேற்கு மண்டல இளைஞரணித் தலைவா் சிவபாலன் மற்றும் மாவட்டப் பொருளாளா் சாமிதுரை ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...