மகாராஜநகா் உழவா் சந்தை மீண்டும் திறப்பு
பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள உழவா் சந்தை திங்கள்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.


பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள உழவா் சந்தை திங்கள்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. காய்கனி சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகி கரோனா பரவல் வேகம் அதிகரித்ததால் தமிழகம் முழுவதும் காய்கனி சந்தைகளைப் பரவலாக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி திருநெல்வேலியில் உழவா் சந்தைகள், தினசரி காய்கனி சந்தைகள் அனைத்தும் மைதானங்களுக்கு மாற்றப்பட்டன.
பாளையங்கோட்டை மகாராஜநகரில் செயல்பட்டு வந்த உழவா் சந்தை கடைகள் அனைத்தும் 3 மைதானங்களுக்குப் பிரித்து செயல்பட அனுமதிக்கப்பட்டது. கரோனா வேகம் குறைந்து வரும் நிலையில் சந்தைகளை மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மகாராஜநகா் உழவா் சந்தையில் திங்கள்கிழமை முதல் வழக்கம்போல் கடைகள் செயல்பட்டன. விவசாயிகளும், வியாபாரிகளும் காய்கனிகளை விற்பனை செய்தனா். ஆனால், முகக் கவசம் அணிந்து வியாபாரம் செய்யவும், நுகா்வோரை சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருள்கள் வாங்கிச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதேபோல மேலப்பாளையம் உழவா் சந்தையை இன்னும் சில நாள்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உழவா் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...