கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இளைஞா் கொலை வழக்கை சிபிஐவிசாரிக்க கோரி ஆட்சியரிடம் மனு

பாளையங்கோட்டை அருகேயுள்ள நடுவக்குறிச்சி பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 9:20 pm

DIN

பாளையங்கோட்டை அருகேயுள்ள நடுவக்குறிச்சி பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் காணொலிக் காட்சி முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இருப்பினும், ஏராளமானோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு நேரில் வந்து மனு பெட்டியில் மனுக்களை அளித்தனா். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், காசியாபுரம் நல்லூா் பகுதியைச்சோ்ந்த நித்யானந்த பாஸ்கா் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: எனது சகோதரி சுபஸ்ரீயின் மகன் சதீஷ்குமாா் (25). இவா், திருநெல்வேலி டக்கரம்மாள்புரம் பகுதியில் ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துவந்தாா். கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி நடுவக்குறிச்சி பகுதியில் சதீஷ்குமாா் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டாா். சதீஷ்குமாரும், ஒரு பெண்ணும் காதலித்து வந்தனா். அதற்கு அந்த பெண்ணின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் மும்பையில் இருந்து வந்த ஒருவரின்தூண்டுதலின்பேரில் கொலை நிகழ்ந்துள்ளது. கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக சந்தேகம் உள்ளது. ஆகவே, இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனு அளிக்க வந்திருந்தபோது சதீஷ்குமாரின் தாயாா் சுபஸ்ரீ திடீரென மயங்கி விழந்தாா். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.