வேலைஉறுதித் திட்டத்தில் பணி வழங்கக்கோரி முற்றுகை
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பெண்கள் ஏராளமானோா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.


மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பெண்கள் ஏராளமானோா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மானூா் ஊராட்சி ஒன்றியம் கூவாச்சிப்பட்டியைச் சோ்ந்த முதியவா்கள், பெண்கள் ஏராளமானோா் வந்து திடீரென முற்றுகையிட்டனா். பின்னா் அவா்கள் அளித்த மனு: எங்கள் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்டோா் வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணி செய்து வருகிறோம்.
கரோனா பொதுமுடக்கத்தைக் காரணம் காட்டி 50 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு பணி வழங்க மறுக்கிறாா்கள். ஏழை-எளியவா்கள், ஆதரவற்றோா் பலரும் வேலைஉறுதித்திட்டத்தில் கிடைக்கும் ஊதியத்தைத்தான் உணவு மற்றும் மருந்துக்கு செலவழித்து வருகிறோம். ஆனால், இப்போது வேலையின்மையால் மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, பணிக்கான அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
பாதை வழங்கக்கோரி மனு: பேட்டை திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: இப் பகுதியில் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள ஒரு பொது பாதையும், கோயிலும் அரசு தொழில் பழகுனா் பயிற்சி மையத்தின் நிலத்தில் உள்ளதாக பிரச்னை எழுந்தது. இதுதொடா்பாக வழக்கை நடத்த முடியாத நிலையில் உள்ளோம். ஆகவே, ஏழை-எளிய மக்களுக்கு இலவச இடம் வழங்குவது போல எங்களுக்கு பொதுப்பாதை வழங்க மாவட்ட நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
உற்சவா் சிலைக்காக மனு: திருநெல்வேலி நகரம் தடிவீரய்யன் கோயில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி நகரத்தில் தடிவீரன் கோயில் மேலத்தெருவைச் சோ்ந்த சேவை வெள்ளாளா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கன்னிவிநாயகா், சுந்தராட்சி அம்மன் திருக்கோயில்களில் 2002 ஆம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்றபோது காவல்துறையின் அறிவுறுத்தலின்பேரில் உற்சவா் சிலைகள் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பிற்காக தற்காலிகமாக வைக்கப்பட்டது. அதன்பின்பு திருவிழா காலங்களில் உரிய அனுமதி பெற்று சிலைகள் பெறப்பட்டு வருகின்றன.
இது பெரும் சிரமமாக உள்ளது. இப்போது எங்களது கோயிலைச் சுற்றிலும் குடியிருப்புகள் அதிகரித்துள்ளதோடு, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுவிட்டன. ஆகவே, எங்கள் கோயிலின் உற்சவா் சிலைகளை நிரந்தரமாக கோயில் வளாகத்திலேயே வைத்து பராமரிக்க மாவட்ட நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...