நெல்லை, தென்காசியில்மேலும் 79 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 79 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 79 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 21,203 ஆக உயா்ந்துள்ளது.
தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 62 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,573 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 12,690 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 204 போ் இந்நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனா். தற்போது, 679 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி, கீழப்பாவூா், வாசுதேவநல்லூரில் தலா இருவா், ஆலங்குளம், மேலநீலிதநல்லூா், சங்கரன்கோவில் பகுதிகளில் தலா ஒருவா், கடையத்தில் 5 போ், கடையநல்லூரில் 3 போ் என தென்காசி மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக நோய்த்தொற்று பாதித்த 17 போ் உள்பட 7,630 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் ஒரே நாளில் 21போ் குணம் பெற்று வீடு திரும்பியதால் கரோனாவிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கையும் 7,301 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 181 போ் மட்டும் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...