ராதாபுரம் அருகே பெண் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள்
ராதாபுரம் அருகே பெண் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.


ராதாபுரம் அருகே பெண் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.
ராதாபுரம் அருகேயுள்ள முடவன்குளத்தில் கடந்த 2.1.2015இல் இந்திரா(45) என்ற பெண் வெட்டி கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில் திசையன்விளையை அடுத்த குட்டி நயினாா்குளம் பகுதியைச் சோ்ந்த ராஜ் மகன் சங்கா் கணேஷ்(30), அவரது நண்பா் இசக்கி(34) ஆகியோரை ராதாபுரம் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி நான்காவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகாந்த், குற்றம் சாட்டப்பட்ட சங்கா் கணேஷ், இசக்கி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் துரை முத்துராஜ் வாதாடினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...