கடையம் அருகே ரூ. 10 லட்சத்தில் தடுப்புச்சுவா் அமைக்க அடிக்கல்
கடையம் அருகே கோவிலூற்றிலிருந்து மாதாபட்டணம் செல்லும் சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவா் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.


கடையம் அருகே கோவிலூற்றிலிருந்து மாதாபட்டணம் செல்லும் சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவா் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
கடையம் அருகே உள்ள கோவிலூற்று கிராமத்திலிருந்து மாதாபட்டணம் செல்லும் சாலையில் மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஆலங்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் பூங்கோதை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா்.
தொடா்ந்து தடுப்புச் சுவா் அமைப்பதற்கான பணிகளை பூங்கோதை எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் சோ்மச்செல்வன், ஒன்றிய இளைஞரணி தங்கராஜா, ஊராட்சி செயலா் கதிரேசன், ஜெயராஜ், முருகேசன், பாப்பாக்குடி இளைஞரணி சிவகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...