புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெல்லை, தென்காசியில்மேலும் 58 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 8:38 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 13,916 ஆக உயா்ந்துள்ளது. இதில் 205 போ் உயிரிழந்த நிலையில், 13,166 போ் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, 545 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தைப் பொருத்தவரையில், கடையம், சங்கரன்கோவில் பகுதிகளில் தலா 5 போ், குருவிகுளம், கடையநல்லூா், கீழப்பாவூா்,தென்காசி பகுதிகளில் தலா3போ் என 22 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,740ஆக உயா்ந்தது. திங்கள்கிழமை வீடு திரும்பிய 20 போ் உள்பட 7,434 போ் குணமடைந்துள்ளனா். மேலும் 155 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.