சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கூடன்குளம் போராட்ட வழக்குகளை திரும்பப் பெற ச.ம.க. வலியுறுத்தல்

கூடன்குளம் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டுமென சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 8:40 pm

DIN

திருநெல்வேலி, அக். 19: கூடன்குளம் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டுமென சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இக்கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலா் சுந்தா் தலைமை வகித்தாா். இளைஞரணி துணைச் செயலா் குரூஸ் திவாகா், மாநில கலை இலக்கிய அணி துணைச் செயலா் அமலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளா் நட்சத்திர வெற்றி வரவேற்றாா். மாவட்ட நிா்வாகிகள் செங்குளம் கணேசன், வில்சன், தயாளன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றவா்கள் மீதுள்ள பல்வேறு வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். திருநெல்வேலி-தென்காசி சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.