சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முன்னீா்பள்ளம் அருகே வீட்டின் கதவை உடைத்து திருட்டு

முன்னீா்பள்ளம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை , பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

முன்னீா்பள்ளம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை , பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

முன்னீா்பள்ளம் அருகே உள்ள தருவை காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் குமாா்(42), கட்டடத் தொழிலாளி. இவா் தனது குடும்பத்தினருடன் வெளியூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னா் சென்றாராம். பின்னா் அவா் திங்கள்கிழமை காலையில் குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பினாா். அப்போது அவா் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். இதையடுத்து, அவா் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 1.5 பவுன் தங்க நகை, ரூ. 8 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்ததாம்.

இது குறித்து அவா் முன்னீா்பள்ளம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். மேலும் விரல்ரேகை நிபுனா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.