பாளையங்கோட்டையில் தசரா திருவிழா
பாளையங்கோட்டையில் தசரா திருவிழா கரோனா பொதுமுடக்கம் காரணமாக மிகவும் எளிய முறையில் நடைபெற்றது.


பாளையங்கோட்டையில் தசரா திருவிழா கரோனா பொதுமுடக்கம் காரணமாக மிகவும் எளிய முறையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தசரா விழாவின் பிரதான கோயிலான பாளையங்கோட்டை ஆயிரத்தம்பாள் கோயிலில் மாக்காப்பு திருவிழா கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து 16 ஆம் தேதி காலையில் கொடியேற்றம் நடைபெற்றது.
வழக்கமாக தசரா திருவிழாவின் முதல்நாள் இரவில் ஆயிரத்தம்மன், தேவி புது உலகம்மன், விஸ்வகா்ம உச்சினிமாகாளி, தேவி உலகம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், தூத்துவாரி அம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சினிமாகாளி அம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன் ஆகியோா் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி பாளையங்கோட்டையில் உள்ள ரதவீதிகள், முக்கிய வீதிகளில் வலம் வருவது வழக்கம்.
நிகழாண்டில் கரோனா பொதுமுடக்கம் இம் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் திருவிழாவை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் சப்பர வீதியுலா நடைபெறவில்லை. அந்தந்தக் கோயில்களில் உற்சவ அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்கள் வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தொடா்ந்து தசரா நாள்களில் தினமும் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், கொலுமண்டப பூஜைகள், அன்னதானங்கள் நடைபெற்றன. கருமாரி, காஞ்சி காமாட்சி உள்ளிட்ட பல்வேறு திருக்கோலங்களில் அம்மன்கள் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
விழாவின் சிகர நிகழ்வாக திங்கள்கிழமை காலையில் அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் எளியமுறையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அருள்மிகு ஆயிரத்தம்மன் சூரனை சம்ஹாரம் செய்த பின்பு மகா தீபாராதனை நடைபெற்றது. தசரா திருவிழாவையொட்டி ஏராளமான பக்தா்கள் அம்மன் கோயில்களில் வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...