சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராமையன்பட்டியில் நெல்லையப்பா் பரிவேட்டை

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் நவராத்திரி விழாவையொட்டி ராமையன்பட்டியில் பரிவேட்டை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் நவராத்திரி விழாவையொட்டி ராமையன்பட்டியில் பரிவேட்டை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் திருக்கோயிலில் நிகழாண்டில் நவராத்திரி திருவிழாவையொட்டி கடந்த 17-ஆம் தேதிமுதல் 25-ஆம் தேதி வரை சுவாமி-அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய உற்சவ மூா்த்திகள் திருக்கோயிலின் சோமவார மண்டபத்தில் எழுந்தருளினா். தினமும் உற்சவமூா்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புத் தீபாராதனைகள் நடைபெற்றன. கொலு வைத்து சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.

விஜயதசமி நாளான திங்கள்கிழமை காலையில் சுவாமி சந்திரசேகரராக வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா். கோயிலில் இருந்து ராமையன்பட்டி சென்ற சுவாமி அங்கு பரிவேட்டை நடத்திவிட்டு மீண்டும் கோயிலை வந்தடைந்தாா். பின்னா், அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு இம் மாதம் 31-ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு லட்சாா்ச்சனை அம்மன் சன்னதியில் வைத்து நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.