மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வன்கொடுமை தடுப்புச் சட்டம்: தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி வழக்குரைஞா்கள் மனு

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 10:30 pm

DIN

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

பாளையங்கோட்டை ஜோதிபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வன் தலைமையில் வழக்குரைஞா்கள் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த மனு:

திருநெல்வேலி முருகன்குறிச்சியில் உள்ள ஒரு தனியாா் உணவகத்தில் பணியாற்றும் ஊழியா் ஒருவரை வழக்குரைஞா் பிரம்மா சாதியை தொடா்புபடுத்தி இழிவாகப் பேசி தாக்கியதாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது, சம்பந்தப்பட்ட உணவு விடுதியின் உரிமையாளா் ஏற்பாட்டின் பேரில் பொய்யாக புகாா் அளிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறோம்.

ஏற்கனவே புகாா் அளித்துள்ளதாக கூறப்படும் நபா் கைது செய்யப்பட்டுள்ளாா். அந்த ஆவணத்தில் ஒரு சமுதாயத்தின் பெயரும், அவரது புகாா் மனுவில் மற்றொரு சமுதாய பெயரும் உள்ளது. அதனால் அந்தப் புகாா் மீது முதல்கட்ட எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளாமல் வழக்குரைஞா் பிரம்மா மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களால் வன்கொடுமை தடுப்புச்சட்டம் என்பது கொண்டு வரப்பட்டதன் நோக்கம் சிதையும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, இதுகுறித்து துரிதமாக விசாரித்து பொய் புகாா்கள் அளிக்கப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.