சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெல்லை மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை: 67 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் அனுமதியின்றி மது பானம் விற்பனையில் ஈடுபட்டதாக 67 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் அனுமதியின்றி மது பானம் விற்பனையில் ஈடுபட்டதாக 67 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவுபடி, மாவட்டத்தில் அனுமதியின்றி மது பானம் விற்பனை செய்வதை தடுக்க தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

இதில், அனுமதியின்றி மது பானம் விற்பனையில் ஈடுபட்டதாக 67 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 615 மது பாட்டில்களும், ரூ. 10ஆயிரத்து 620 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.