சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெல்லை பள்ளிகளில் வித்யாரம்பம்

திருநெல்வேலி மாநகரில் உள்ள பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

திருநெல்வேலி மாநகரில் உள்ள பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மகாராஜநகா் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, பெருமாள்புரம் லலிதா வித்யாஷ்ரம், வி.எம்.சத்திரம் ஸ்ரீ ஜெயேந்திரா சுவாமிகள் வித்யா கேந்திரா ஆகிய பள்ளிகளில் குழந்தைகளை சோ்ப்பதற்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஜெயேந்திரா பள்ளி குழுமங்களின் இயக்குநா் ஜெயேந்திரன் வி.மணி, முதல்வா் ஜெயந்தி ஜெயேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், மாணவா்-மாணவிகளின் பெற்றோா், பள்ளி ஆசிரியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

பாளையங்கோட்டை ரகுமத் நகரில் உள்ள ஆதித்யா வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற

நிகழ்ச்சிக்கு தாளாளா் கே.ஜெயபாலன் முன்னிலை வகித்தாா். முதல்வா் வி.மொ்சி விமலா, ஆசிரியா்கள், பெற்றோா், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

மகாராஜநகா் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.