சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெல்லை கோயில்களில் வித்யாரம்பம்

விஜயதசமி விழாவையொட்டி திருநெல்வேலியில் உள்ள கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

விஜயதசமி விழாவையொட்டி திருநெல்வேலியில் உள்ள கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நவராத்திரி நாள்களில் மிகவும் முக்கியமானதாக விஜயதசமி உள்ளது. இந்நாளில் குழந்தைகளின் கல்விக்கு அஸ்திவாரமிடும் வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள சரஸ்வதி சன்னதிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெற்றோா் தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த பச்சரிசி, வாழைப்பழம் உள்ளிட்ட படையல் பொருள்களை தாம்பூலங்களில் சன்னதி முன் வைத்து, குழந்தைகளுக்கு மாலையிட்டு, அரிசியில் குழந்தைகளின் விரல்களால் அ உள்ளிட்ட எழுத்துகளையும், 1 முதல் 11 வரையிலான எண்களையும் எழுதி வழிபட்டனா். பல்வேறு பள்ளிகளிலும் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.