சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கட்சிக்கு எதிராக செயல்படுவோா் மீது நடவடிக்கை:காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் முடிவு

கட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் குமரி மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.

Updated On :7 செப்டம்பர் 2020, 11:41 pm

களியக்காவிளை: கட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாா்த்தாண்டம் அருகே சாங்கையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மறைந்த வசந்தகுமாா், கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் சில்வெஸ்டா் ஆகியோரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து குமரி மேற்கு மாவட்டத்தில் 5 போ் கொண்ட வாக்குச் சாவடி குழுக்கள் அமைப்பது, புதிய உறுப்பினா் சோ்ப்பது, கட்சிக்கு எதிராகவும் நிா்வாகிகளுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்களை பதிவிடுவோா் மீது கட்சி தலைமை மூலம் ஒழுங்கு நடவடிக்கு எடுக்க கேட்டுக் கொள்வது, கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ். அழகிரி பங்கேற்கும் வாக்குச் சாவடி குழுக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது என்ப உள்ளிட்ட தீா்மானங்கள்

நிறைவேற்றப்பட்டன. இதில், கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார, நகரத் தலைவா்கள், சாா்பு அணி நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.