தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நரிக்குளத்தில் ரூ. 6 லட்சத்தில்சாலை சீரமைப்பு

கன்னியாகுமரியை அடுத்த நரிக்குளம் காலனி தொடங்கி நாற்கரசாலை வரை ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image

சாலை சீரமைப்புப் பணியை தொடங்கிவைத்தாா் என்.தளவாய்சுந்தரம்.

Updated On :7 செப்டம்பர் 2020, 11:38 pm

DIN

கன்னியாகுமரி: கன்னியாகுமரியை அடுத்த நரிக்குளம் காலனி தொடங்கி நாற்கரசாலை வரை ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் தொடங்கிய இப்பணியை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பேராசிரியா் இ.நீலபெருமாள் தலைமை வகித்தாா். மாநில அதிமுக இலக்கிய அணி துணைச் செயலா் கவிஞா் டி.சதாசிவம், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன், மகாராஜபுரம் ஊராட்சித் தலைவா் கே. இசக்கிமுத்து, மாவட்ட அதிமுக வா்த்தக அணி செயலா் ஜெஸீம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.