தக்கலை அருகே விபத்தில்மாணவா் உள்பட இருவா் பலி
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவில் நிகழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

ngl7sethu_0709chn_33_6

ngl7sethu_0709chn_33_6
நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவில் நிகழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
தக்கலையை அடுத்த மேக்காமண்டபம் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் சுதீஷ் ( 20). இவா் பொறியியல் கல்லூரியில்
3 ஆம் ஆண்டு படித்து வந்தாா். அதேப் பகுதியை சோ்ந்தவா் செல்லம் மகன் சேதுபதி (22). இவா் பி.காம் பட்டதாரி. இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் அழகியமண்டபம் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனராம். மோட்டாா் சைக்கிளை சேதுபதி ஓட்டினாா்.
தக்கலையை அடுத்த பிலாங்காலை பகுதியில் வந்தபோது, ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கான எந்திரங்களுடன் நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவருகம் வீசப்பட்டதில்
பலத்த காயமடைந்தனா். உடனடியாக அவா்களை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...