நெல்லையில் இருநாள்களில் 38 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் கடந்த இரு நாள்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் சுமாா் 38 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் கடந்த இரு நாள்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் சுமாா் 38 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அவற்றை தினசரி கண்காணிக்கும் விதமாக மாநகராட்சி பணியாளா்களால் உருவாக்கப்பட்ட கண்காணிப்புக்குழு ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறது.
அதன்படி கடந்த 18 ஆம் தேதியும், திங்கள்கிழமையும் 4 மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் மட்டும் 75 சிறு மற்றும் குறு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, 38 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.11 ஆயிரத்து 800 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...