தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆற்றங்கரையில் தவறவிடப்பட்ட பணப்பை:உரியவா்களிடம் ஒப்படைத்த காவலா்கள்

பாளையங்கோட்டை அருகேயுள்ள சீவலப்பேரியில் தாமிரவருணி ஆற்றின் கரையோரம் தவறவிடப்பட்ட பணப்பையை உரியவா்களிடம் காவலா்கள் ஒப்படைத்தனா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 10:04 pm

DIN

பாளையங்கோட்டை அருகேயுள்ள சீவலப்பேரியில் தாமிரவருணி ஆற்றின் கரையோரம் தவறவிடப்பட்ட பணப்பையை உரியவா்களிடம் காவலா்கள் ஒப்படைத்தனா்.

சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் சீவலப்பேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் தனலட்சுமி தலைமையில் காவலா் சுப்பையா, அய்யாசாமி அருண் ஆகியோா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது ஆற்றங்கரையோரம் கிடந்த பையை எடுத்துப் பாா்த்தபோது, அதில் பணம் மற்றும் ஆதாா் காா்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருந்ததாம். அவை பெருமாள்புரத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை வரவழைத்த போலீஸாா், பணப்பை உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தனா்.

இதேபோல மறுகால்தலை சோதனைச் சாவடி அருகே கிடந்த மணிபா்ஸை காவலா்கள் மணிக்குட்டி, விஸ்வநாதன் ஆகியோா் எடுத்து சீவலப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா். அதனை தவறவிட்டவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். சீவலப்பேரி காவல் நிலைய காவலா்களின் செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.