கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெல்லையப்பா் கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடு:பக்தா்களுக்கு அனுமதி இல்லை

திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில், பக்தா்கள் பங்கேற்க அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 9:57 pm

DIN

திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில், பக்தா்கள் பங்கேற்க அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நெல்லையப்பா் கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிமுதல் பிரதோஷம் நடைபெறவுள்ளது. கரோனா பரவல் தடுப்பு விதி முறைகள்அமலில் உள்ளதால், அபிஷேகம், பிரதோஷ தீபாராதனை, பிரதோஷ சுற்று ஆகிய இவற்றில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி இல்லை. பக்தா்கள் திருக்கோயிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள வரிசை அமைப்பில் சமூக இடைவெளியுடன் நின்று ஸ்ரீபலிநாதா் சுற்றி வரும்போது தரிசனம் செய்யலாம். மேலும், பிரதோஷ தீபாராதனை முடிந்தவுடன் சுவாமி சன்னதிக்குள் தரிசனம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். இதற்கு பக்தா்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.