/

பாளை.யில் கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு

நெல்லை கம்பன் கழகத்தின் 528-ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாக ஸ்ரீதியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூன் 2022, 8:55 pm

DIN

நெல்லை கம்பன் கழகத்தின் 528-ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாக ஸ்ரீதியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். அ.முருகேசன் இறைவணக்கம் பாடினாா். ‘பத்துரதனின் மித்திரன்’ என்னும் தலைப்பில் சடாயுவின் பெருமைகள் குறித்து அ.முருகேசன் உரையாற்றினாா்.

தலைவா் சிவ.சத்தியமூா்த்தி கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவில் ‘சீதா கல்யாணம்’ என்னும் தலைப்பில் சீதை-ராமன் திருமண நிகழ்வை இசைப் பேருரையாக வழங்கினாா். துணைத் தலைவா் ந.சு.சங்கரன் வரவேற்றாா். துணைத் தலைவா் ந.சு.சங்கரன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் வை.ராமசாமி, செ.திவான், எஸ்.முத்துக்குமாா், பி.முருகேசன், ஆா்.கே.லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.