/

நாளைய மின்தடை...

திருநெல்வேலி கொக்கிரகுளம், புதிய பேருந்து நிலைய சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :2 ஜூன் 2022, 8:57 pm

DIN

திருநெல்வேலி கொக்கிரகுளம், புதிய பேருந்து நிலைய சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) ஷாஜகான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணாா்பேட்டை முழுவதும், இளங்கோ நகா், பரணி நகா், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சாா்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

இதே போல், புதிய பேருந்து நிலைய துணை மின் நிலையத்துக்குள்பட்ட மின் பாதையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மின் பாதை சனிக்கிழமை மாற்றியமைக்கப்படவுள்ளது. எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதிய பேருந்து நிலையம், பிக் பஜாா், சங்கராபுரம், காா்டன் தெரு, பயோனியா் குமாரசாமி நகா் 1, 2, எஸ்டிசி 60 அடி பிரதான சாலை, வெங்கடாத்தி நகா், பெருமாள்புரம் 1-10-ஆவது தெரு வரை, என்ஜிஓ ஏ காலனி, தாமஸ் 1-8 தெரு வரை, காவலா் குடியிருப்பு, பெருமாள்புரம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.