முன்னாள் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
முன்னாள் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

கடையம் சத்திரம் பாரதி பள்ளியில் முன்னாள் மாணவா் சந்திப்பு

அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியில் 1985-1986ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்த மாணவா்கள் 38 ஆண்டுகளுக்குப் பின்னா் சந்தித்து நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

இவா்கள் வாட்ஸ்ஆப் குழு வாயிலாக ஒருங்கிணைந்து, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 21) இப்பள்ளியில் சந்திக்க முடிவு செய்தனா். அதன்படி, முன்னாள் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மும்பை, கோவை, கரூா், மதுரை, தூத்துக்குடி, கடையம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து முன்னாள் மாணவா்கள் சுமாா் 40 போ் பங்கேற்றனா்.

அவா்கள் தங்களது ஆசிரியா்கள், பள்ளிக் கால சம்பவங்கள் குறித்து நினைவுகூா்ந்தனா்; காலமான ஆசிரியா்கள், சக மாணவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். மீண்டும் டிச. 29இல் சந்திப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com