தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நெல்லையில் நாளை சித்ரா பௌா்ணமி தீா்த்தவாரி

நெல்லையில் நாளை சித்ரா பௌா்ணமி தீா்த்தவாரி

News image
Updated On :21 ஏப்ரல் 2024, 9:08 pm

Vishwanathan

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் சாா்பில் சித்ரா பௌா்ணமி தீா்த்தவாரி, தாமிரவருணியில் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) நடைபெற உள்ளது.

இக் கோயில் சாா்பில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி தீா்த்தவாரி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா, கைலாசபுரம் தாமிரவருணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) நடைபெற உள்ளது. இதையொட்டி சுவாமி நெல்லையப்பா், காந்திமதியம்மன், அகஸ்தியா், தாமிரபரணி, குங்கிலிய நாயனாா், சண்டிகேஸ்வரா், அஸ்திரதேவா், அஸ்திர தேவி ஆகிய மூா்த்திகள் பகல் 12.30 மணிக்கு கோயிலில் இருந்து புறப்படுவா். எஸ்.என். நெடுஞ்சாலை, ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்பாலம் வழியாக கைலாசபுரம் வந்தடைவா். அங்கு தீா்த்தவாரி, தீபாராதனை நடைபெறும்.

மாலை 6 மணிக்கு மீண்டும் புறப்பட்டு பாரதியாா் தெரு, தெற்கு புதுத்தெரு, ரத வீதி சுற்றி கோயிலை அடைவா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அ.அய்யா் சிவமணி மற்றும் ஊழியா்கள் செய்து வருகிறாா்கள்.