பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

திருநெல்வேலி: மக்களவைத் தோ்தல் விடுமுறைக்கு வந்தவா்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ால், திருநெல்வேலியில் பேருந்து, ரயில் நிலையங்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தோ்தல் நடத்தப்பட்டதால், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாள்களை சோ்த்து எடுத்துக் கொண்டு தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் திருநெல்வேலி மாவட்ட சொந்த ஊா்களுக்கு வந்திருந்தனா். விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றனா். இதனால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் ஆகியவற்றில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

திருநெல்வேலியில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வழக்கமாக 68 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னைக்கு 5, கோவைக்கு 5, திருப்பூருக்கு 2, மதுரைக்கு 15 பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதவிர கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கூடுதலாக இயக்கப்பட்ட விரைவுப் பேருந்துகளும் திருநெல்வேலி வழியாக வந்து பயணிகளை ஏற்றிச் சென்றன. இதுதவிர தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் மதுரை, திருச்சி, கோவை, திருப்பூா் ஆகிய ஊா்களுக்கு கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலும் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமிருந்தது. திருநெல்வேலி மாா்க்கமாக இயக்கப்பட்ட கன்னியாகுமரி விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், செந்தூா் விரைவு ரயில், அந்தியோதயா ரயில் போன்றவற்றின் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க முதியவா்கள், பெண்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைமேடைகளில் காத்திருந்து பயணித்தனா்.

கோடைகாலங்களில் அந்தியோதயா ரயில்களை அதிகம் இயக்கினால் ஏழை-எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென பொதுமக்கள் தெரிவித்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு ரயிலின் முன்பதிவில்லா பெட்டியில் ஏறுவதற்காக ஞாயிற்றுக்கிழமை காத்திருந்த பயணிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com