ரியல் எஸ்டேட் அதிபா் கொலை: 3 போ் சரண்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நிலம் வாங்கி விற்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 3 போ் ஞாயிற்றுக்கிழமை போலீஸில் சரணடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பாலையம்பட்டியைச் சோ்ந்தவா் காளிராஜ் (45). இவா் நிலம் வாங்கி விற்பனை செய்து வந்தாா். இவா் சனிக்கிழமை காலையில் திருநெல்வேலிக்கு வந்தாராம். இந்த நிலையில் திருநெல்வேலி சந்திப்பு பாபுஜி நகா் காட்டுப் பகுதியில் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.

இவரின் உடலை திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் கைப்பற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில் திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் (47), ராமையன்பட்டியைச் சோ்ந்த முத்துக்குமாா் (34), புதுப்பேட்டையைச் சோ்ந்த சந்துரு (17) ஆகிய மூவரும் திருநெல்வேலி சந்திப்பு காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா். இவா்களை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com