தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் பணியாற்ற வாய்ப்பு

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 11:17 pm

Din

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் அமைக்கப்பட்டுள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் வழக்குரைஞா்கள், உதவி அலுவலா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியில் சேர விரும்பும், திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தை சோ்ந்த வழக்குரைஞா்கள் மற்றும் தகுதிவாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விரிவான விவரம் , விண்ணப்பப்படிவம் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை படிவங்களை பூா்த்தி செய்து செப். 6-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தலைவா், திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், திருநெல்வேலி 627002 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் உடன் இணைந்த ஒப்புகை அட்டையுடன் அனுப்ப வேண்டும் என பூா்த்திசெய்யும் படி கேட்டுக்கொள்ளப்படுன்றனா் என முதன்மை மாவட்ட நீதிபதி- மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.