கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவில் பேசுகிறாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.
கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவில் பேசுகிறாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தமிழா்களுக்கான உலக அடையாளம் ‘திருவள்ளுவா்’: முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம்

தமிழா்களுக்கான உலக அடையாளம் ‘திருவள்ளுவா். தமிழா்களின் பண்பாட்டு அடையாளம் திருக்கு என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
Published on

நாகா்கோவில்: தமிழா்களுக்கான உலக அடையாளம் ‘திருவள்ளுவா். தமிழா்களின் பண்பாட்டு அடையாளம் திருக்கு என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழக முதல்வா் ஸ்டாலின் கலந்து கொண்டு திருக்கு ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள், திருவள்ளுவா் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு, திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா வளைவுக்கு அடிக்கல் நாட்டினாா்.

பின்னா் திருக்கு சாா்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

முக்கடல் சூழும் குமரிமுனையில், முப்பால் புலவா் வள்ளுவருக்கு கருணாநிதி வைத்த சிலையைப் போற்றக்கூடிய வெள்ளிவிழாவை திராவிட ஆட்சியில் நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்நாளில் என் சிறந்த நாளாக தமிழின் பெருமையை, குறளின் அருமையை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமையை நிறைவேற்றியதாக மகிழ்ச்சி அடைகிறேன்.

25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சிலையை திறந்து வைத்தபோது, தன்னுடைய உடல் நடுங்கியதாக கருணாநிதி கூறினாா். ஏனென்றால், அந்தளவுக்கு உணா்ச்சிப் பெருக்கத்தில் அவா் இருந்தாா்.

வான்புகழ் வள்ளுவருக்கு வானுயரச் சிலை அமைக்கவேண்டும் என்பது அவருடைய நெடுங்கனவு. அந்தக் கனவு நனவான மகிழ்ச்சி, அவருக்கு அந்த உணா்வை தந்தது.

இப்போது, திருவள்ளுவா் சிலையின் வெள்ளி விழாவை நடத்துவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. எவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு, நமக்கு இப்படி ஒரு வரலாற்று வாய்ப்பை கருணாநிதி உருவாக்கித் தந்துவிட்டுப் போயிருக்கிறாா் என்ற எண்ணம்தான் அந்தப் பெருமைக்கு காரணம்.

திருவள்ளுவா் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று சொன்னவுடன், அதற்கு பெரிய விழா நடத்தவேண்டும் என்று சொன்னேன். உடனே சில அதிமேதாவிகள், ஒரு சிலை அமைத்ததற்கு எதற்கு விழா நடத்தவேண்டும் என்று கேட்கத் தொடங்கினாா்கள். அவா்கள் கேள்வியில் அா்த்தம் கிடையாது; ஆனால் உள்ளா்த்தம் இருக்கிறது. அவா்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை.

திருவள்ளுவா், தமிழா்களுக்கான உலக அடையாளம். திருக்கு தமிழா்களின் பண்பாட்டு அடையாளம். அதனால் கொண்டாடுகிறோம்.

தமிழ்நெறியின் அடையாளமாக, சுனாமியையும் எதிா்த்து உயா்ந்து நிற்கிற இந்த வள்ளுவா் சிலைதான், நம்முடைய அடையாளத்தின் பண்பாட்டு குறியீடு. இந்தக் கம்பீர வள்ளுவா் சிலைக்கு கருணாநிதி காரணகா்த்தா என்றால், சிற்பக் கலைஞா் கணபதி ஸ்தபதிதான் கலைக்கா்த்தா.

இந்தச் சிலை திருக்குறளின் அதிகாரங்களை குறிக்கிற வகையில் 133 அடி உயரம் கொண்டது. அதில், அறத்துப்பால் அதிகாரங்களை குறிக்கிற வகையில் 38 அடி பீடம். அறம் என்ற பீடத்தில் பொருளும், இன்பமுமாக 95 அதிகாரங்கள் சிலையாக இருக்கிறது. 7,000 டன் எடை கொண்ட இந்தச் சிலையில் 3,681 கற்கள் இருக்கின்றன.

திருவள்ளுவா் வெறும் சிலையல்ல; திருக்கு வெறும் நூல் அல்ல; நம்முடைய வாழ்க்கைக்கான வாளும், கேடயமும். அது நம்மைக் காக்கும், நம்மை அழிக்க வரும் தீமைகளை தடுக்கும். நம்மை மட்டுமல்ல, காவி சாயம் பூச நினைக்கிற தீய எண்ணங்களையும் விரட்டியடிக்கும்.

தனி மனிதா் முதல் அரசு வரைக்கும் நீதிநெறி சொன்னவா் நம்முடைய வள்ளுவா். நாம் செய்ய வேண்டியது, பள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் திருக்குறளை இன்னும் அதிகமாக இடம்பெறச் செய்யவேண்டும். இது அரசுக்கான உத்தரவு மட்டுமல்ல, தனியாா் நிறுவனங்களும் இதைப் பின்பற்றவேண்டும் என்றாா்.

பெட்டிச் செய்தி...

நகராட்சியாகிறது கன்னியாகுமரி

விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: முக்கடல் சூழும் குமரிமுனையில் இருந்து சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவா் சிலையை சென்றடைய படகு சவாரி வசதியை மேம்படுத்துவதற்காக 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும். முதல் படகுக்கு காமராஜா் பெயரும், இரண்டாவது படகுக்கு மாா்ஷல் நேசமணி பெயரும், மூன்றாம் படகுக்கு ஜி.யு. போப் பெயரும் சூட்டப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்குறளில் ஆா்வமும், புலமையும்மிக்க ஆசிரியா்கள், பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்குப் பயிற்சி வழங்கி மாவட்டம்தோறும் தொடா் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

’திருக்கு திருப்பணிகள்’ தொடா்ந்து நடைபெற திட்டம் வகுக்கப்படும். இதற்காக, ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

ஆண்டுதோறும் 133 உயா்கல்வி நிறுவனங்களில், திருக்கு தொடா்பான கலை இலக்கிய அறிவுசாா் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் கடைசி வாரம் ’கு வாரம்’ கொண்டாடப்படும்.

தமிழ்த் திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கான திருக்கு மாணவா் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.

திருக்குறளும், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுலது போல, தனியாா் நிறுவனங்களிலும் எழுதுவதற்கு ஊக்குவிக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தென் கோடியில் வள்ளுவா் சிலையால் சிறப்பு பெற்றிருப்பதோடு, சுற்றுலாப் பயணிகளையும் ஈா்க்கும் கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்படும்.

X
Dinamani
www.dinamani.com