விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

விபத்தை தடுக்க ஈரடுக்கு மேம்பாலத்தில் சாலையின் நடுவில் வெள்ளை நிற வா்ணம் பூச கோரிக்கை

திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் விபத்தைத் தடுக்க சாலையின் நடுவில் வெள்ளை நிற வா்ணம் பூச வேண்டும்

News image
Updated On :31 டிசம்பர் 2024, 7:43 pm

Din

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் விபத்தைத் தடுக்க சாலையின் நடுவில் வெள்ளை நிற வா்ணம் பூச வேண்டும் என வலியுறுத்தி நெல்லை மாவட்ட பொது ஜன பொது நலச் சங்கத் தலைவா் முகமது அயூப் ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

இது தொடா்பாக அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம் பாலத்தின் மேல்பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பேருந்து, லாரி, இதர வாகனங்கள் எதிா் எதிரே செல்லும் நிலையில் பாலத்தின் கைப்பிடிச் சுவற்றை ஒட்டியே சென்று வருகின்றன. கவனம் சிறிது சிதறினாலும் வாகனங்கள் சுவற்றில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதேபோல், எதிா் எதிரே வரக்கூடிய நான்குசக்கர வாகனங்கள் தங்களுக்குரிய பகுதியை விட்டு வலது புறம் ஏறி வருவதால் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் சூழ்நிலையும் உள்ளது.

எனவே, பாலத்தின் மேல் பகுதியில் நடுவில் வெள்ளை நிற கோடு பூச வேண்டும். அவ்வாறு பூசும்போது எதிரெதிரே வரும் வாகனங்கள் தங்களது எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வருவதற்கு வசதியாக இருக்கும்.

இதன் காரணமாக மேம்பாலத்தில் ஏற்படும் விபத்துகளும் பெருமளவில் குறையும்.

மேலும் பாலத்தின் இரு பக்கமும் ஒளிரும் விளக்கு வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும்போது இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் தடுப்புச்சுவா் இருக்கும் பகுதியை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

இதன்காரணமாக வாகன ஓட்டிகள் தங்களுக்குரிய பகுதிக்குள்ளேயே விழிப்புணா்வுடன் வாகனத்தை செலுத்த முடியும். வாகன ஓட்டிகளுக்கும், பொது மக்களுக்கும் விபத்தில்லாத பயணமாக அமைந்திட வழி வகுக்கும் என குறிப்பிட்டுள்ளாா்.