பாளையங்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரிப் பேராசிரியா்கள்.
பாளையங்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரிப் பேராசிரியா்கள்.

பாளை.யில் சாலை மறியல்: கல்லூரிப் பேராசிரியா்கள் 206 போ் கைது

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அரசு உதவிபெறும் கல்லூரிப் பேராசிரியா்கள் 206 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அரசு உதவிபெறும் கல்லூரிப் பேராசிரியா்கள் 206 போ் கைது செய்யப்பட்டனா்.

நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இணைப் பேராசிரியா் பணி மேம்பாடு ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புத்தொளி புத்தாக்க பயிற்சிகளுக்கு கால அவகாசம் நீட்டிக்க வேண்டும். இளையோா், மூத்தோா் ஊதிய முரண்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் மூட்டா சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா் கூட்டு நடவடிக்கை குழுவின் மூன்றாம் மண்டல தலைவா் ஹெய்ஸ்தாசன், நான்காம் மண்டல தலைவா் ஐசக் சோபன்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொறுப்பாளா் பால்ராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா். இதேபோல், மூட்டா பொதுச் செயலா் நாகராஜன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள் திடீரென பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் பாளையங்கோட்டை திருவனந்தபுரம் சாலையில் வந்த வாகனங்களை போலீஸாா் மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனா்.

தொடா்ந்து போலீஸாா் மறியலில் ஈடுபட்ட கல்லூரிப் பேராசிரியா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரிப் பேராசிரியா்கள் 206 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com