நெல்லை நகரத்தில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
நெல்லை நகரத்தில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்


திருநெல்வேலி நகரத்திதல் 40 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலி நகரத்தில் அருள்மிகு நெல்லையப்பா் கோயில் வாசல் பகுதி, வடக்கு ரதவீதி, மேலரதவீதி ஆகிய இடங்களில் மாநகர நல அலுவலா் சரோஜா, உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் தி. சசி தீபா,திருநெல்வேலி மண்டல உணவுப் பாதுகாப்பு அலுவலா் கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் கடைகளில் சோதனை செய்யப்பட்டது.
அப்போது, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் 40 கிலோ கைப்பற்றப்பட்டு ரூ.22 ஆயிரம் அபராதமும், சுகாதாரமற்ற கடைகளுக்கு ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...