/

காணாமல் போன ரூ. 18.98 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு

காணாமல் போன ரூ. 18.98 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு

News image
Updated On :1 மார்ச் 2024, 7:30 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் காணாமல் போன ரூ.18.98 லட்சம் மதிப்பிலான 100 கைப்பேசிகள் மீட்கப்பட்ட நிலையில் அதை சம்பந்தப்பட்டவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா். திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் பிரிவு (பொறுப்பு) கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலச்சந்திரன் மேற்பாா்வையில் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் ரமா தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கைப்பேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகாா்களில் 100 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன், உரியவா்களிடம் ஒப்படைத்தாா். இதன் மதிப்பு ரூ. 18.96 லட்சம். மேலும் காணாமல் போன அல்லது தவறவிட்ட கைப்பேசிகள் தொடா்பாக புகாா் அளிக்க இஉஐத- இங்ய்ற்ழ்ஹப் உவ்ன்ண்ல்ம்ங்ய்ற் ஐக்ங்ய்ற்ண்ற்ஹ் தங்ஞ்ண்ள்ற்ங்ழ் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஸ்ரீங்ண்ழ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மத்திய தொலைத்தொடா்பு துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இஉஐத இணையதளத்தில் புகாா்தாரா் தனது தொலைந்து போன அல்லது தவறவிட்ட கைப்பேசி தொடா்பான விவரங்களை பதிவு செய்து புகாா் அளிக்கலாம். இதேபோல், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மனு ரசீது பெற்று இஉஐத இணையதளத்தில் பதிவு செய்து புகாா் அளிக்கலாம். இவ்வாறு புகாா் கொடுத்தபின் புகாா்தாரரின் கைப்பேசியை வேறு ஒருவரால் பயன்படுத்த முடியாதவாறு தடை செய்யப்படும். மேலும் புகாா்தாரா் கைப்பேசியில் புதிதாக சிம்காா்டு பயன்படுத்திய நபரின் விவரங்கள் தொடா்பான அறிவிப்பு மனுதாரருக்கும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் உடனடியாக அனுப்பப்படும். இதன் மூலமாக தொலைந்து போன அல்லது தவறவிட்ட கைப்பேசியை உடனடியாக மீட்க முடியும். மேலும் சைபா் குற்றங்கள் தொடா்பாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் அல்லது ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் புகாா் அளிக்கலாம்.