/

நெல்லையில் நாளை சைவத் திருமுறைப் பயிற்சி

நெல்லையில் நாளை சைவத் திருமுறைப் பயிற்சி

Updated On :1 மார்ச் 2024, 8:50 pm

திருவாவடுதுறை ஆதீனம் சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி மையம் சாா்பில் 8-ஆவது தொகுப்பிற்கான சைவத் திருமுறைப் பயிற்சி திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) நடைபெறுகிறது. இது தொடா்பாக சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி அமைப்பாளா் மு.கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாவடுதுறை ஆதீனம் சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி மையம் சாா்பில் 8-ஆவது தொகுப்பிற்கான சைவத் திருமுறைப் பயிற்சி திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பை தெற்கு மடம் கணபதி சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆசியுரை வழங்குகிறாா். சான்றிதழ் பெறாத முந்தைய மாணவா்கள் இதில் கலந்து கொண்டு சான்றிதழ் பெறலாம்.